என் மன வானில்

Monday, March 20, 2006

ஓர் வேண்டுகோள்

எங்கள் இறைவா,
எங்களுக்கு...


அன்பை தா
அருளை தா
அனுதினமும் தா...

பண்பை தா
பாசத்தை தா
தழைத்தோங்கத் தா...

உழைப்பை தா
உயர்வை தா
பார்புகழத் தா...

பொன்னை தா
பொருளை தா
மனமகிழத் தா...

அமைதியை தா
மனிதத்தை தா
இப்புவியெங்கும் தா...

மகிழ்ச்சியை தா
குதூகலத்தை தா
என்றென்றும் தா...

வெற்றியை தா
விவேகத்தை தா
வீறுநடைபோடத் தா...

தன்னிறைவை தா
மனநிறைவை தா
அனைவருக்கும் தா...

சமத்துவத்தை தா
நிதானத்தை தா
மனம்நிறையத் தா...

நேசத்துடன்
முஜிப்

5 Comments:

At 5:11 AM, Blogger rnateshan. said...

தம்பி மூஜீப்,
உன் நல்ல உள்ளத்திற்கு இறைவன் அனைத்தையும் தருவார்!!

 
At 6:48 AM, Anonymous Anonymous said...

அன்பின் தம்பி முஜீப்,

மறக்க முடியாத தருணங்களுக்குள்
மயங்கி நானும் சிக்கியின்று
முல்லை போல் மணக்கும் புங்கை
முஜீபின் இணைய இல்லம் ஏகினேன்
இனித்தது உங்கள் படைப்புக்கள்
இளையவர் ஆற்றலை மெச்சுகிறேன்
தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்
தொடரும் எனது வாழ்த்துக்கள்
தமிழ் வாழ வேண்டும் என் தாய் அவள்
தம்பி உம்போன்ற இளையோர்
தயங்காமல் இழை பின்ன வேண்டும்
தளராமல் தொடர அண்ணணின் வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 
At 7:51 AM, Blogger புங்கைமுஜீப் said...

மிக்க நன்றி சக்தி அண்ணா.உங்களை போன்றோரின் ஆசிர்வாதத்தால் தான் நான் இன்னும் சிறப்படைகிறேன்.மீண்டும் நன்றி கலந்த வணக்கங்கள்.
முஜிப்

 
At 7:52 AM, Blogger புங்கைமுஜீப் said...

மிக்க நன்றி சக்தி அண்ணா.உங்களை போன்றோரின் ஆசிர்வாதத்தால் தான் நான் இன்னும் சிறப்படைகிறேன்.மீண்டும் நன்றி கலந்த வணக்கங்கள்.
முஜிப்

 
At 9:38 PM, Blogger பரஞ்சோதி said...

அன்பு முஜிப்,

வாழ்த்துகள்.

இறைவனிடம் வேண்டினால் கட்டாயம் கிடைக்கும், உங்களுக்கு கிட்டியதை எங்களுக்கும் கொடுங்க :)

அன்புடன்
பரஞ்சோதி

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home