என் மகள் அடித்த லூட்டி
என் மகள் அடித்த லூட்டி
சமீபத்தில் நான் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி. அன்று எங்கள் வீட்டின் குளிர் சாதனப் பெட்டி பழுது
பார்ப்பதற்காக AC technician வந்திருந்தார்.
அப்போது அறையை திறந்து உள்ளே சென்ற போது என் கூடவே என் மகள் அஸீராவும்,என் தங்கை மகளும் (வயது 3+இருவருக்கும்) உடன் வந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துகொண்டிருந்தார்கள்.
வந்தவர் பழுது பார்த்து கொண்டிருந்தார்.நான் இருவரையும் சண்டி பண்ணாமல் உட்கார்ந்திருக்கனும் என்று சொல்லி கொண்டிருந்த போது எனது அம்மா,எனக்கும் வந்தவருக்கும் தேனீர் கொண்டு வந்து என்னை கூப்பிட்டார்கள்.
நான் அதை வாங்கி வந்து AC technician வசம் மரியாதையாக காபி சாப்பிடுங்க என்று சொல்ல போக, இதை உன்னித்து பார்த்து கொண்டிருந்த என் மகள் டக்கென்று காபி எல்லாம் சாப்பிட கூடாது டாடி,குடிக்கணும் ன்னு சொல்ல,என் முகத்தில் ஈ ஆடாத குறையாக இஞ்சி தின்ற குரங்காக நான் வழிய,பழுது நீக்க வந்திருந்தவர் குபீர் என அவரை அறியாமலே சிரித்து விட்டார்.
நேசத்துடன்
முஜிப்
0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home