என் மன வானில்

Saturday, April 01, 2006

மறக்க முடியாத தருணங்கள்-4

மறக்க முடியாத தருணங்கள்-4

கடந்த வாரம் எங்கூட்டுகாரங்களுக்கு சளி பிடித்திருந்தது.என் மனைவிக்கு சளி பிடித்திருந்தால் தொண்டையை சரி செய்ய கரகரவென்று கனைப்பது வழக்கம்.

இதே போல் நான் ஊரில் இருக்கும் போது செய்தால் கிண்டலுக்காக நானும் சேர்ந்து கர கரவென்று சவுண்ட் விட்டு வாங்கி கட்டி கொள்வது வழக்கம்.

ஆனால் இது போன்ற சேட்டைகளை என் மகளின் (தற்போது வயது 4) பார்வையில் ஒரு போதும் செய்தது இல்லை.

இரண்டொரு நாட்களுக்கு முன் ஓர் பொன்மாலை பொழுதில் என் மகளுக்கு பாடம் சொல்லி கொடுத்திருக்கிறாங்க என் மனைவி.அப்போது இடையே குரலை சரி செய்ய கர கர (அட்ஜஸ்மெண்ட்) சரி செய்திருக்கிறாள்.

அச்சமயத்தில் நன்றாக படித்து கொண்டிருந்த என் மகள் (என்னை போலவே) படிப்பதை நிறுத்தி விட்டு என் மனைவி செய்வதை போலவே கர கர தொண்டை சரி செய்வது போல இமிடேட் பண்ணி விட்டு டக்கென்று திரும்ப படிக்கஆரம்பித்திருக்கிறாள் என் செல்ல மகள் :-)

இதை பார்த்து வியந்து, உடனே பொறுக்க முடியாமல் என் மனைவி எனக்கு தொலைபேசி மூலம் இந்த சுவையான நிகழ்வை "உங்க மகள் உங்களை மாதிரியேநக்கலடிக்கிறாங்க" என்று சொல்லி ஆதங்கப்பட ஒரு கணம் என் கண்கள் என் மகளை தேடியது.வாரி அணைத்து கொள்ள கைகள் துடிதுடித்தது.அன்றைய இரவு தூங்க மறுத்தன என் கண்கள்.

உங்கள் விமர்சனங்களையும், பின்னூட்டங்களையும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.
பின்னூட்ட மின்னஞ்சல் : mujibudeen@gmail.com

நேசத்துடன்
முஜிப்-அல் கோபர்
அலைபேசி : 00966-565128721

1 Comments:

At 9:36 PM, Blogger பரஞ்சோதி said...

அன்பு முஜிப்,

உங்க வருத்தத்தில் நானும் கலந்து கொள்கிறேன், தாயின் வயிற்றிலிருந்தது முதல் 15 மாதங்கள் வரை என்னுடன் இருந்த என் மகளை ஒரு மாதம் பிரிந்திருக்கவே நான் பட்டபாடுகா எத்தனை என்பது எனக்குத் தான் தெரியும், அப்படி இருக்கையில் உங்கள் செல்ல மகளை பற்றி நீங்க சொன்னதை படித்தது அதே வருத்தம் நானும் அடைகிறேன்.

ஊருக்கு எப்போ செல்ல இருக்கீங்க?

அப்புறம் தொடர்ந்து உங்க பதிவுகளை கொடுங்க.

அன்புடன்
பரஞ்சோதி

 

Post a Comment

<< Home