என் மன வானில்

Sunday, April 16, 2006

மறக்க முடியாத தருணங்கள்-7

தார்குச்சிக்கு பற்றிய ஓர் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று.

வெள்ளிகிழமை தோறும் எங்கள் ஊர் காரர்கள் 5-8 பேர் அருகில் உள்ள ஊர்காரர் ஒருவரின் வீட்டில் கூடி விடுவோம்.
கூடி ஊர் செய்திகள்/பிரச்சனைகள்,உலக கதை/பிரச்சனை என்று கலகலப்பாக நேரம் போறதே தெரியாது.அப்படி ஓரே அரட்டையாக இருக்கும்.

இதே உண்மையில் ஊரில் இருந்திருந்தால் கூட இவ்வளவு அக்கறையோடு,செய்திகளை பறிமாறி இருப்போமா,தெரிந்திருப்போமா என்றால் நிச்சயம் இருந்திருக்கவே இருக்காது.ஒன்றை இழந்தால் தான் அதன் உண்மையான மதிப்பு அறியப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இது போல ஒரு வெள்ளிகிழமை அரட்டை அடித்து விட்டு மதியம் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தோம்.அன்று வழக்கத்துக்கு மாறாக தாள்சா(சாம்பார்) சாப்பாடு. எனக்கு சாப்பாடு சரியாக உள்ளே செல்லவில்லை.

நான் எப்போதும் வீட்டில் சொல்லுவது போல் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தார்குச்சி இருக்கிறதா என்று கேட்டு விட்டேன்,தெரியாத்தனமாக.

எல்லோரும் என்னை பார்த்து முறைக்க ஆரம்பித்து விட்டார்கள்.அதில் ஒரு நண்பர் என்னப்பா முஜிப் கொஞ்சம் முன்னடி நல்லா தானே இருந்தே என்ன திடீரென இப்படி ஆயிட்டப்பா? என வினவினார்.இன்னொருத்தர் தார்குச்சின்னா ஊருக்கு தான் போய் வாங்கிட்டு வரணும் னார்.

ஆளாளுக்கு ஒண்ணொன்னு சொன்னாங்க.இப்ப நீங்களும் குழம்பியிருக்கிற மாதிரி,என்னடா இவன் தார்குச்சியை கேட்கிறானேன்னு.?

எல்லாத்தையும் வாங்கி கட்டி கொண்டு நான் ஒரு கேள்வி கேட்டேன். மாடு சரியா ஓடலைன்னா என்ன பண்ணனும்னு.?அதுக்கு ஒருத்தர் தார்குச்சியால ஒரு போடு போட்டா தானா ஓடுதுண்ணார்.அதத் தான் நானும் கேட்டேன்னு சொன்னேன்.

சாம்பார் சாப்பாடு சரியாக இறங்க மாட்டுது.தார்குச்சி போன்ற ஊறுகாயை கொடுத்தீங்கண்னா என் சாப்பாட்டு வண்டி நல்லா ஓடும்பா என்று நான் நகைச்சுவையா சொன்னவுடன் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்பல்லாம் சாப்பிட உட்கார்ந்தாலே முஜிபுக்கு தார்குச்சிய முதலில் எடுத்து கொடுங்கப்பா ன்னு அடிக்கடி ஒரு நண்பர் கிண்டலடிப்பார்.

நேசத்துடன்
முஜிப்

2 Comments:

At 7:14 AM, Blogger Vassan said...

வணக்கம்.

புங்கை என்பது புங்கணூர் என்பதன் சுருக்கமா..? இது சரியென்றால் வைத்தீசுவரன் கோவிலுக்கு மேற்கே மணல்மேடு போகும் வழியில் வரும் புங்கணூரை சேர்ந்தவரா நீங்கள்..?

புங்கணூர் அஜீஸ் பாய் என்பவர் என் தந்தைக்கு தெரிந்தவர், நண்பர். தி.மு.க கட்சிக்காரர். நிறைய பேருக்கு தெரியும் அவரை. தற்போது என்ன செய்கிறார் என்பது தெரிந்து கொள்ள ஆவல் !!

நன்றி.

 
At 9:43 PM, Blogger புங்கைமுஜீப் said...

வாசன் அண்ணன் அவர்களே,
உண்மையில் உங்கள் விமர்சனத்தை படித்தவுடன் உங்களை போன்றோரின் தாய்மொழி மற்றும் சொந்த ஊரின் பாசத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.மிக்க மகிழ்ச்சி அண்ணன்
நேசத்துடன்
முஜிப்

 

Post a Comment

<< Home