என் மன வானில்

Saturday, April 22, 2006

கவலை எனும் சக்கரம்

கவலை உணர்வு வந்தால்
மனசு முழுக்க!!!

அமைதியை நாடுது..
நேர்வழியை தேடுது..
பாவ மன்னிப்பு கோருது..
குற்ற உணர்ச்சிகள் குத்தூசியாய் குத்துது..
சபல புத்திக்கு சவுக்கடி கொடுக்க துடிக்கிது..
கெட்ட எண்ணங்கள் தலைதெறிக்க ஓடுது..
இறைநம்பிக்கை மேலோங்குது..
நற்செயல்கள் செய்ய தூண்டுது..
பிராத்தனைகள் வேண்டுது..
சற்று கவலை தீர்ந்த பின்
மகிழ்ச்சி குடிபுகுந்து,
சந்தோஷம் ஆரம்பமானால்
மெல்ல மெல்ல அனைத்தையும் மறந்து
வேதாளம் பழையபடி முருங்கைமரம் ஏறி
மிருகமாய் மாறுது.

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

3 Comments:

At 9:43 AM, Anonymous Anonymous said...

Mujib, Assalamu Alaikum,

I am very impressed with this post. I am surprised to know you r also from khobar.
-Mubarak Sha

 
At 1:02 AM, Blogger புங்கைமுஜீப் said...

thanks mubarak for your appreciations.
mujib-khobar

 
At 6:21 AM, Anonymous Anonymous said...

உண்மைதாங்க. கவலை உணர்வு மனசுக்குள் வந்திட்டால் நீங்க சொன்ன மாதிரிதாங்க நடக்குது. மகிழ்ச்சி வந்தாலும் நாமே துன்பத்தை மறுபடியும் தேடிக்கிறோம். இந்த நிலை போனாதான் மனசுக்குள் மகிழ்ச்சி உணர்வு வரும்.

 

Post a Comment

<< Home