என் மன வானில்

Sunday, April 23, 2006

கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுப்போம் வாங்க

சரி நான் ஓரு புதிர் போட்டு பார்க்கிறேன்.
ஒருவர் கையில் கொஞ்சம் பூக்களுடன் கோவிலுக்கு செல்கிறார்.

கோவில் வாசலில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை போட்டால் தான் வாசல் கதவு திறக்கும்.

மூன்று வாசல்களை கடந்து தான் தரிசனத்துக்கு செல்ல வேண்டும்.

தெப்ப குளத்தில் அவர் எத்தனை பூக்களை போடுகிறாரோ அது இரண்டு மடங்கு பூக்களாக திரும்ப கிடைக்கும்.

மூன்று முறை தான் குளத்தை உபயோகிக்கமுடியும்.

--------------------------------------------------------------

முதலில் குளத்தில் அவர் கொண்டு வந்த பூக்களை போடுகிறார்.அது இரண்டு மடங்கு பூக்களாக கிடைக்கிறது.

அவற்றில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை முதல் வாசலில் போடுகிறார்.முதல் வாசல் திறக்கிறது.

மீண்டும் தெப்ப குளத்தில் மீதமுள்ள பூக்களை போடுகிறார்.இரண்டு மடங்கு பூக்களாக கிடைக்கிறது.

அவற்றில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை இரண்டாவது வாசலில் போடுகிறார்.இரண்டாவது வாசல் திறக்கிறது.

மீண்டும் தெப்ப குளத்தில் எஞ்சியுள்ள பூக்களை போடுகிறார்.இரண்டு மடங்கு பூக்களாக திரும்ப கிடைக்கிறது.

கிடைத்த அனைத்து பூக்களையும் மூன்றாவது வாசலில் போடுகிறார்.கதவு திறக்கிறது.தரிசித்து விட்டு வெருங்கையுடன் வீடு திரும்புகிறார்.

கேள்வி இது தான்.

1)அவர் எத்தனை பூக்கள் வரும்போது கையோடு எடுத்து வந்தார்?

2)ஒவ்வொரு வாசலிலும் கதவு திறக்க எத்தனை பூக்களை போட்டார்?

பி.கு : மூன்று வாசல்களையும் திறக்க ஒரே எண்ணிக்கையிலான பூக்கள் தான் போட பட வேண்டும்.

எங்கே விடை சொல்லுங்கள் பார்ப்போம்??

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

8 Comments:

At 4:22 AM, Anonymous Anonymous said...

Hi,
This is the first time i'm posting a comment here eventhough i'm a regular reader in thenkoodu. OK the answer is he brings 7 flowers and put 8 in each door

 
At 9:37 PM, Blogger பரஞ்சோதி said...

வாழ்த்துகள் அருண்.

முஜிப் மேலும் புதிர்கள் சொல்லுங்க.

 
At 9:40 PM, Blogger புங்கைமுஜீப் said...

வாழ்த்துக்கள் அருண்.
மிக்க நன்றி பரஞ்சோதி அண்ணன்.
நிச்சயம் நேரம் கிடைக்கும் போது புதிர் போடுகிறேன்
முஜிப்

 
At 7:35 PM, Anonymous Anonymous said...

Dear Mujib,
Can u help me to Input my comments in Tamil?

 
At 9:16 PM, Blogger புங்கைமுஜீப் said...

Dear Arun,

Please send an email to mujibudeen@gmail.com as i dont know your email id. i will send you the software needed and also the necessary help files so as to make it easy for you to type in tamil. Regards, Mujib

 
At 5:26 AM, Anonymous Anonymous said...

DEAR MUJIB,

HE BROUGHT 3 FLOWERS. FIRST HE PUT 1 FLOWER AND GOT 2 FLOWERS. NOW TOTAL 4 FLOWERS. HE PUT 2 FLOWERS IN FIRST DOOR. BALANCE 2.

2ND HE PUT 1 FLOWER AND GOT 2 FLOWERS. NOW TOTAL 3 FLOWERS. HE PUT 2 FLOWERS IN 2ND DOOR. BALANCE 1 FLOWER.

3RD HE PUT 1 FLOWER HE GOT 2 FLOWERS. NOW TOTAL 2 FLOWERS. HE PUT 2 FLOWERS IN 3RD DOOR.

MUJIB NAAN SONNATHU SARIA ? PLS HELP ME HOW TO WRITE IN TAMIL.

AHMED KABEER
E:MAIL ahmed.kabeer@gacworld.com

 
At 5:33 AM, Anonymous Anonymous said...

I WILL TELL YOU ONE PUTHIR,

A BASKET CONTAIN CERTAIN NO.OF APPLES. FIRST MAN CAME AND HE TOOK HALF BASKET OF APPLES AND HALF (PAATHI) APPLE.

2ND MAN CAME AND HE TOOK HALF BASKET OF APPLE (X/2-1/2) AND HALF (PAATHI) APPLE.

3RD MAN CAME AND HE TOOK HALF BASKET OF APPLE AND HALF (PAATHI). NOW BASKET IS EMPTY.

TELL ME HOW MANY APPLES WERE IN THE BASKET.

FOR YOUR INFORMATION NO APPLE WAS CUT INTO HALF.

 
At 6:41 AM, Blogger புங்கைமுஜீப் said...

அன்பின் கபீர்,
நீங்கள் சொன்னது தப்பு நண்பரே.விதிமுறைப்படி கொண்டு வந்த,கையிலுள்ள அனைத்தையும் இரட்டிப்பாக்க உபயோகப்படுத்த வேண்டும்.

விடையை நானே சொல்லி விடுகிறேன்.அருண் முன்னே சொல்லிவிட்டார்.

அவர் கொண்டு வந்த மலர்களின் எண்ணிக்கை 7.
ஒவ்வொரு வாசலிலும் வைத்த மலர்களின் எண்ணிக்கை 8.

உங்கள் புதிர் எனக்கு சரியாக விளங்கவில்லை.கூடையில் உள்ள எண்ணிக்கையில் பாதி புரிகிறது.அதற்கப்புறம் உள்ள பாதி ஆப்பிள் எதன் எண்ணிக்கையில் என்பது புரியவில்லை.

தமிழில் தட்டச்சுவது மிகவும் எளிது.தனிமடலில் விரைவில் உங்களுக்கு உதவுகிறேன் :-)


நேசத்துடன்
முஜிப்

 

Post a Comment

<< Home