என் மன வானில்

Sunday, June 11, 2006

நினைவுகள்

தினம் தினம்...
வைகறையின் வசந்தமாய்
இளங்கதிரின் நம்பிக்கையாய்
தென்றல்காற்றின் மென்மையாய்
குயில்களின் சங்கீதமாய்
தமிழ்மொழியின் தேன்சுவையாய்
புயல் காற்றின் சீற்றமாய்
நடுஜாமத்து நிசப்தமாய்
முடிவில்லா கடலலை போல்
பல வித பரிணாமங்களுடன்
தனிமையின் ஊடே
வந்து வந்து செல்கிறது
உன் நினைவுகள்...

நேசத்துடன்
முஜிப்

Wednesday, June 07, 2006

தோல்வி

வாழ்க்கையை வெறுப்பது ஏனோ,
பெற்றோரை நினையாதது ஏனோ,
சுற்றத்தாரை மறப்பது ஏனோ,
நண்பர்களை துறப்பது ஏனோ,
வெற்றியே வாழ்க்கையாகிவிடுமா?
தோல்வியில் கண்ட படிப்பினையில்
உனை நீ ஏன் திருத்தி கொள்ளலாகாது?
பெற்றோர்,உறவினர்,நண்பர்களின் சந்தோஷத்தை
பூர்த்தி செய்வதும் உன் கடமையல்லவா?
உயிரை மாய்த்து கொள்வதும்,
நடைமுறையை விட்டு தூரம் செல்வதும்
உன் தோல்விக்கு தீர்வாகி விடுமா?
உன் தனிபட்ட தோல்விக்காக
உனை சூழ்ந்துள்ளவர்களையும்
சோகத்தில் ஆழ்த்துவது நியாகமாகுமோ?
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி,
கூடியுள்ளவர்களின் நிறைவில்
உன் நிறைவை காண
ஆவண செய்வாய் மானிடா...

நேசத்துடன்
முஜிப்

Tuesday, June 06, 2006

காதலெனும் கிருமி

வாழவும் வைக்கும்..
வீழவும் வைக்கும்..
நோகவும் வைக்கும்..
சாகவும் வைக்கும்..
துணிவை கொடுக்கும்..
தூக்கத்தை கெடுக்கும்..
நிதானத்தை குலைக்கும்..
குடும்பத்தை கலக்கும்..
கட்டுகோப்பை குலைக்கும்..
எதிர்ப்பை கொடுக்கும்..
ஏக்கத்தை கொடுக்கும்..
புரிதலை கொடுக்கும்..
மகிழ்ச்சியை கொடுக்கும்..
கலங்கவும் வைக்கும்..
பக்குவ படுத்தும்..
பரவச படுத்தும்..
பைத்திய மாக்கும்..

நேசத்துடன்
முஜிப்