என் மன வானில்

Saturday, May 27, 2006

மறக்க முடியாத தருணம்


உயிரை கொடுப்பதும் உயிரை எடுப்பதும் இறைவன் கையில் தான் உள்ளது.நம் கையில் இல்லை என்பதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த மறக்க முடியாத சம்பவம்.

ஒரு இரண்டு வருடத்துக்கு முன் அல்ஹசா என்னும் இடத்தில் எங்கள் நிறுவனத்தின் தலைமையகம் செயல் பட்டு வந்தது.அது நகரின் புறத்தே 20 கி.மீ தூரத்தில் அமைந்திருந்தது.தங்குமிடம்,உணவு விடுதி ,அலுவலகம் அனைத்தும் ஒருங்கே அமைய பெற்றிருந்தது.

ஒரு நாள் மதிய இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக நான் மற்றும் கூட பணிபுரியும் நண்பர்கள் இருவரும் campus யின் உள்ளே அமைந்துள்ள உணவு விடுதிக்கு அரட்டை அடித்து கொண்டு எப்போதும் போல நடந்து சென்று கொண்டிருந்தோம்.

இவ்வளவுக்கும் மூவரும் நடந்து சென்றது ரோட்டின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் தான்.நடைபாதையை ஒட்டி மணல் முட்டுகளால் பரப்பப்பட்டிருக்கும்.இடைவெளிகளில் பசுமையான மரங்கள் அழகிய முறையில் கிளைகள் வெட்டபட்டு சூழ்ந்திருக்கும்.

சாதரணமாக campus யின் உள்ளே அதுவும் உணவு விடுதிக்கு செல்லும் வழியில் ஒரு போதும் வாகனங்கள் வர வாய்ப்பில்லை.அனுமதியுமில்லை.அவசரத்துக்கு சமயங்களில் சூப்பர்வைஸரின் கண்களில் மண்ணி தூவி விட்டு சில விற்பனை பிரதிநிதிகள் வேனை எடுத்து கொண்டு வந்து விடுவார்கள்.

எப்போதும் ரோட்டில் நடந்து செல்லும் நாங்கள் அன்றைய தினம் வெயில் அதிகம் இருந்ததாலும் நடைபாதையை ஒட்டி மரங்கள் இருப்பதனாலும்,நிழலுக்காக ரோட்டில் நடக்காமல் நடைபாதையில் நடந்து சென்றோம்.

சில வினாடிகளில் நடைபாதையில் ரோட்டை ஒட்டி வந்துகொண்டிருந்த நான் அசுர வேகத்தில் பின்னால் வந்த வேனின் adjustable கண்ணாடியின் விளிம்மில் என் தலையின் பின்பக்கம் பலமாக தாக்கபட்டு, அடிபட்டு நல்லவேளையாக மணல் குவியல்களில் தூக்கி எறியபட்டேன். மயக்கமுற்றேன்.
வேன் வந்ததோ அடிபட்டதோ எதுவும் எனக்கு தெரியாது.சிறிது நேரம் கழித்து தண்ணீர் முகத்தில் தெளித்ததற்கப்புறம் தான் நான் அடிபட்டது எனக்கே தெரிந்தது.

அன்று நான் உயிர் பிழைத்தது அபூர்வம்.மயிரிலையில் தப்பினேன். ஒரு செண்டிமீட்டர் இடைவெளி கூடியிருந்தால் கண்ணாடி இரும்பு போஸ்டில் சிக்கி மரணமடைந்திருக்க கூடும்.மேலும் அக்கண்ணாடியானது folding திருப்பும் விதத்தில் அமைய பெற்றிருந்ததால் அடிப்பட்ட மாத்திரத்தில் கண்ணாடி திரும்பிய வேகத்தில் என்னை மணலில் தூக்கி எறிந்து விட்டது.
எனவே எந்த ரத்த காயமோ வண்டிக்கு சிறு சிராப்பு கூட இல்லை.தலையில் பலத்த அடிபட்டால் மூக்கிலிருந்து ரத்தம் வர கூடாதாம்.நல்ல வேளை அப்படி எதுவும் ஆகவில்லை.

இருந்தாலும் உயிர் போகும் அளவுக்கு வலி இருந்தது.ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு மூளைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று சொன்னார்கள்.

அன்று நான் பிழைத்தது இறைவனின் அருளால் அன்றி வேறொன்றும் இல்லை.நான் அன்றைய தினம் பிழைத்து கொள்வேன் என்று எழுதபட்டிருக்கின்றது போல.

அதனால் அன்றைய தினம் மயிரிழையில் உயிர் தப்பினேன்.போஸ்டில் சிக்கி அடிபட்டு அன்றைய தினம் மரணித்திருந்தால் அடிபட்டது தலை என்பதால் நான் இறக்க போவது எனக்கே தெரிந்திருக்காது.எல்லாவற்றையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது,நம்மையெல்லாம் இயக்குகிறது உண்மை என்பதை அன்றைய தினம் கண்ணீர் மல்க அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

நேசத்துடன்
முஜிப்

Wednesday, May 24, 2006

முரண்பாடு

அடுத்தவர் குறைகளை
அலசி ஆராய்ந்து
ஏளனம் நிறைந்த குத்தல்
பேச்சுக்களால் துளைத்தெடுக்க
சிரத்தை எடுக்கும் மானிடா,
நீ உன் குறைகளை
அலசி ஆராய்ந்து
களை எடுக்க
சிரத்தை எடுக்காதது ஏனோ???

~முஜிப்

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

குண்டக்க மண்டக்க
ஒரு பொண்ணு கலகலன்னு எப்போதும் சிரிச்சிட்டுருந்தா
அவளுக்கு பெயர் கலகலப்பானவள்:-)

ஆனா ஒரு ஆம்பள கலகலன்னு எப்போதும் சிரிச்சிட்டுருந்தா
அவனுக்கு பெயர் மற கழண்டவன்.:-(

ஒரு பொண்ணு ஒரு பையனை பார்த்து
லுக்கு விட்டா அவன் முகத்தில் உதிர்வது
மகிழ்ச்சி கலந்த புன்னகை...

ஒரு பையன் ஒரு பொண்ண பார்த்து
லுக்கு விட்டா அவள் முகத்தில் உதிர்வது
கோபம் கலந்த முறைப்பு...

நெஞ்சு பொறுக்குதில்லையே.......
பாவம்பா ஆம்பள பசங்க......
ஹா ஹா ஹா

நேசத்துடன்
முஜிப்

Thursday, May 18, 2006

மறக்க முடியாத தருணம்

எப்போது என் மனைவியிடம் தொலைப்பேசும் போது என் செல்ல மகள் என்ன செய்கிறாள்,என்ன சொல்கிறாள் என்று கேட்டறிவது வழக்கம்.அது போல இன்று தொலைபேசும்போது கேட்டேன்.

இரண்டொரு நாட்களுக்கு முன் சற்று சீக்கிரமே என் மகளை படுக்க சொல்லியிருக்கிறாள் என் மனைவி.படுத்திருந்த என் மகள்,சிறிது நேரம் கழித்து என் மகள் அடுக்களையில் இருந்த என் மனைவியின் காதில் விழும்பைடி "அம்மா இங்கே வாயேன்.உன்னிடம் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்" என்று கூப்பிட்டிருக்கிறாள்.

சரி ஏதோ சேதி சொல்ல தான் கூப்பிடுகிறாள் என்று அப்படி என்ன செய்திடி என்று கேட்டு கொண்டே என் மனைவி அவள் அருகில் செல்ல கிட்ட வா என்று கூப்பிட்டு என் மனைவியை உட்கார சொல்லி கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டுட்டு வாம்மான்னு நக்கலடித்திருக்கிறாள்.

என் மனைவிக்கு கோபம் சுறீரென்று உடனே வந்தாலும் அடக்கி கொண்டு குபீரென சிரித்திருக்கிறாள்.
இந்த செய்தியை என் மனைவி இன்று தொலைபேசும் போது சொல்ல நான் இல்லாத குறையை உனக்கு என் மகள் தீர்த்து வைக்கிறாள் என்று என் மனைவியிடம் சொல்ல,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என்று என் மனைவி அலுத்து கொள்ள, நான் விழுந்து விழுந்து சிரிக்க என் மனைவியும் சிரித்து வயிறு வலி எடுத்துடுச்சி போங்க...

நேசத்துடன்முஜிப்

Wednesday, May 17, 2006

வாழ்க்கை பயணம்நாம்

நாம் வாழும் வாழ்க்கையானது
ஒரு சிக்கலான பயணத்தை போன்றது.
பிரத்யேகமாக நாம் செல்லும்
இலக்கை பொறுத்து
போகுமிடங்களில் இடைஞ்சல்களை,
தடைகற்களை தாண்டி செல்லும் பயணமாக.
நித்தமும் பிரகாசமாகவும்
மகிழ்ச்சியுடனும் நன் வாழ்வு
அமையாதன்றோ அது போல......

நேசத்துடன்முஜிப்

Tuesday, May 09, 2006

கண்ணீர் Vs நீர்வீழ்ச்சி

கவலையெனும் முகாந்தரமாய் உருவெடுத்து,
ஓடும் வழிகளில் மன அழுத்தமெனும்
மூலிகைகளில் கலந்து,
சோகத்தின் பிரதிபலிப்பாய்
பிணி போக்கும் நிவாரணியாய்,
பருவ மழை பொய்பித்தாலும் கூட
வற்றாத ஜூவ நதியாய்,
பொய்ப்பிக்காமல் கொட்டுகிறது அருவி....


முஜிப்-அல்கோபர்

Friday, May 05, 2006

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

நடு சாமத்தில் தீடீரென தூக்கம் கலைந்த மனைவி உடன் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த கணவனை காணாமல் தேடுகிறாள்.

கடைசியாக கீழ் தளத்தில் கணவனின் முனகல் சத்தத்தை கேட்டு மாடியிலிருந்து கீழ் இறங்கி வந்து விளக்கை போட்டு பார்க்கும்போது ஆச்சர்ய படும்படி தன் கணவன் ஒரு பந்தை போல் முழங்காலை மடித்து குருகி உட்கார்ந்தவராய் கன்னத்தில் கையை வைத்து கொண்டு விம்முவதை பார்த்து, "இந்த நடு சாமத்தில் ஏன் என்னாச்சு உங்களுக்கு", என்று பதற்றபட்டவளாய் கணவனிடம் வினவ, அதற்கு கணவன்,20 வருடத்துக்கு முன் உன்னை கர்ப்பமாக்கினேனே,அது உனக்கு ஞாபகமிருக்கிறதா?.
அதற்கு மனைவி, மறக்க கூடிய விசயமா அது? அதுக்கென்ன இப்போ?.
அந்த சமயத்தில் உன் (வழக்கறிஞர்) அப்பா,உன்னை கல்யாணம் பண்ணிகலன்னா 20 வருஷம் உள்ள தள்ளிடுவேன்னு பயமுறுத்தினாரே? ஞாபகமிருக்கிறதா?
ம். அதுக்கென்ன இப்போ?
வேறுன்னுமில்ல,அழுகையை அடக்க முடியாது உடல் குலுங்கியவராய்,"அப்போதே நான் ஜெயிலுக்கு போயிருந்தேன்ணா நேற்று நான் விடுதலையாகியிருப்பேன்"

ஹா ஹா

முஜிப்

Tuesday, May 02, 2006

ஓவியமும் வாழ்க்கையும்


வாழ்க்கையென்பது வர்ணமடிக்க பயன்படும் பலகை போன்றது.

உங்கள் மேனி,பண்பு இன்னும் நாடு மற்றும் குடும்ப பிறப்பிடம் போன்ற பண்பு நலன்களால் ஓர் ஆன்மாவாக நீங்களே உங்கள் ஆரம்ப நிறத்தினை தெரிவு செய்கிறீர்கள்.

பின்பு வாழ்க்கையெனும் கலைத்திறனை வரைய வண்ணந் தீட்டும்
தூரிகையோடும்,வண்ணங்களோடும் வாழ்க்கையெனும் பயணத்தில் சங்கமிக்கிறீர்கள்.

இந்த இடத்தில் தான் அதிகமானோர் தடுமாறுகிறார்கள்.

வாழ்க்கையெனும் வர்ணந் தீட்டும் தூரிகையால் வர்ணங்களை ஒன்றின் மேல் ஒன்றாக தவறுதலாக தெளித்து விட்டு நம் வாழ்க்கை எனும் ஓவியம் நாம் நினைத்த மாதிரி அமையவில்லையே என்று வியந்து கொள்கிறார்கள்...

உங்கள் வாழ்க்கையானது எவரேனும் ஒருவரின் தவறோ,பிழையோ அல்லது பொறுப்பாகவோ ஒரு போதும் ஆகாது.

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளானது மகிழ்ச்சி எனும் வர்ணம் தீட்டும் தூரிகையால் உங்களுக்கு பிடித்த உண்மையான வாழ்க்கை எனும் ஓவியத்தை வரைவதாகும்.

இவ் ஓவியத்தை சரியென்றோ தவறென்றோ கொள்ளலாகாது என்றாலும் கூட நீங்கள் இதில் ஒரு போதும் தோல்வி அடைய மாட்டீர்கள்.!!!!!!!
முஜிப்-அல்கோபர்