என் மன வானில்

Monday, August 20, 2007

நிஜம்‍ ஒரு உண்மை சிறுகதை

மனம் எங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்க,பரிட்சைக்கு படிப்பது போன்ற பாவனையுடன் ஏதோ சிந்தனையில் சக அறை தோழன் ராஜாவிடம் வாங்கி கட்டிக்க கூடாது என்கிற பயத்தில் புத்தகத்தை புரட்டி படிப்பது போன்று பாவ்லா செய்து கொண்டிருந்தேன்.

இடையிடையே பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வந்து விட கூடாதென்று செய்யுளை உறக்க படித்து மனப்பாடம் செய்வது போன்று பில்டப் கொடுத்தேன்.

இடையில் அலைபேசி அழைப்பு வர நண்பன் ராஜா ஐந்து நிமிடம் வெளியில் சென்று வந்தவன் என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க , நானும் சம்பந்தமில்லாது ஏதும் உளரி வைக்காமல் திறு திறு வென விழிக்க, அப்போது தான் என் முகத்தில் ஓடியிருக்கும் சோக இழையை பார்த்த ராஜா தூக்கக் களை என்று நினைத்து கொண்டு "என்னடா தூக்கம் வருதா? நான் வேணும்னா போய் டீ வாங்கிட்டு வரவா" என்று கேட்ட , "இல்லடா, வேணாம் ஏன் உனக்கு சிரமம்" என்று விசயத்தை மேலும் சிக்கலாக்காமல் மழுப்பி முற்று புள்ளி வைத்தேன்.

ஏன் தான் இப்படி ஒன்றுமில்லாத அற்ப விசயத்துக்கெல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மன சஞ்சலப் படுகிறேன் என்று எனக்கு நானே கேள்வி கேட்டு என்னை நானே திட்டி கொண்டேன்.

விடிந்தால் செமஸ்டர் தமிழ் தேர்வு.இரவு பத்து மணி ஆகிவிட்டிருந்தது.தமிழ் தானே.பரிட்சை சமயத்தில் ஒரு முறை பார்த்து கொள்ளலாம் என்கிற அலட்சியம் .நாளை காலை எழுதப்போதும் பரிட்சையில் பெயிலாகி விடுவோமோ என்கிற பயம் வேறு அவ்வப்போது என் மன வானில் தோன்றித் தோன்றித் மறைந்தது.

படிக்கவேண்டும்,எப்படியாவது முட்டி மோதி பாஸாகி விட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தும் கூட மனதுக்கேற்பட்ட கவலை எனும் கோளாறு காரணமாக படிப்பதற்கு ஏனோ மனம் ஒப்பவில்லை.

மணி இரவு 10:20 ஐ தாண்டி விட்டிருந்தது.எதோ ஒரு உறுத்தலில் அப்போது தான் படிக்க ஆரம்பித்திருந்தேன்.ராஜாவுக்கு மறுநாள் கணக்கு பரிட்சை.சந்தேகம் இருப்பதால் அவன் சக வகுப்பு நண்பன் அறைக்கு செல்வதாகவும் ,காலையில் தான் ரூமுக்கு வருவேன் என்று சொல்லி விட்டு சென்றிருந்தான்.

அவன் அறையை விட்டு சென்றது தான் தெரியும்.ஒரு பக்கம் கூட புரட்டி இருக்க மாட்டேன்.நன்றாக தூங்கி விட்டிருந்தேன்.மறுநாள் காலை ராஜா அறைக்கு வந்து எழுப்பினான். :டேய் 8 மணி ஆகிடுச்சி. இன்னுமா தூங்கற.போய் குளிச்சிட்டு வா.மெஸ் ஹால் போறதுக்கு நேரமாகிடுச்சி என்று சவுண்டு விட பதறி அடித்து எழுந்தேன். ஏதோ உலகமே முடிந்து விட்டது போன்ற உணர்வில் எனக்கு வியர்த்து விட்டிருந்தது.

இனி நம் கதை அவ்வளவு தான் என்கிற மன புழுக்கத்தில் நெளிந்த வண்ணம் பரிட்சை ஹாலுக்கு சென்று கேள்வித் தாளை வாங்கினேன். பதற்றத்தில் என்ன செய்வது என்று திகைத்த வண்ணம் அப்படியே ஸ்தம்பித்து கேள்வித்தாளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தேன்.

என்னங்க இன்னும் எந்திரிக்கலையா. மணி 8 ஆகுது.இன்னிக்கி ஆபீஸ் போகலையா என்று என் மனைவி அடுக்கடுக்கா கேள்வி கேட்டு அதட்டி எழுப்பி விட ,அப்போ இன்னிக்கி உண்மையில் தமிழ் பரிட்சை எழுத வேண்டாமா என்கிற சந்தோஷ களிப்பில் அலுவலகம் செல்ல ஆயத்தமானேன். ஏதோ தத்ரூபமாக உண்மையில் நடந்து கொண்டிருப்பது போன்ற பொய் கனவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு சந்தோஷப் புன்முறுவலாக பெரு மூச்சு விட்ட படி.....

நேசத்துடன்
முஜிப்

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க‌

நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவருக்கும் என் சலாம் மற்றும் வணக்கங்கள்:)


சில பட பெயர்களை வைத்து சில சிரிப்பு சிந்தனைகள்.சிரிப்பதற்காக மட்டும்.:))

நானே ராஜா,நானே மந்திரி : அட இருந்துட்டு போயேன்.யாரு வேணாம்னா??

அலைகள் ஓய்வதில்லை : பெரிய ஆராய்ச்சி பண்ணி கண்டு புடிச்சிட்டாருய்யா.கண்டு புடிச்சிட்டாரு.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தம்பிக்கு எந்த ஊரு : சொன்னா என்ன எனக்கு கெளரவ டாக்டர் பட்டமா கொடுக்க போற.??

நான் அவன் இல்லை : அய்யோ அய்யோ தாங்க முடியலைடா சாமி.முதல்ல நீ நீ தானான்னு பாருப்பா.

வைகாசி பொறந்தாச்சி : அப்போ சித்திரை பொறக்கலையா.என்ன கொடுமை சார் இது.

பயணங்கள் முடிவதில்லை. : ஆமாம். அப்படியே not stop ஆ போயிகிட்டே இரு.வெளங்கிடும்.

போக்கிரி : உன் மூஞ்சிய முதல்ல கண்ணாடில்ல பாருப்பா.சிரிப்பு வருது.
புன்னகை மன்னன் : இப்படியே சிரிச்சிகிட்டே இரு. சீக்கிரமா கீழ்பாக்கம் போயிடுவே.

இளமை ஊஞ்சலாடுகிறது : அப்போ முதுமை ஊஞ்சலாடாதா??

காதல் அழிவதில்லை : பென்சிலால எழுதி ரப்பரால அழிச்சி பாரு .அழியும்.

நாளை நமதே : அப்போ இன்னிக்கி??

சின்ன தம்பி பெரிய தம்பி : அப்போ இடையில் ஒருத்தர் இருந்தா எப்படி கூப்பிடறது.




நேசத்துடன்
முஜிப்